Friday, February 28, 2014

தமிழ் தேசிய தலைவரை பற்றி ஒரு சிறு குறிப்பு

என் உயிருக்கு இனிப்பான தமிழ் உறவுகளுக்கு வணக்கம் ...!

தமிழ் தேசிய தலைவரை பற்றி ஒரு சிறு குறிப்பு 

அந்த இளைஞன் ஒரு அரசாங்கத்தை எத்ர்த்துப் போராடலாம் என்று முடிவெடுத்த போது அந்த இளைஞனின் வயது வெறும் பதினெட்டு தான். தான் எதிர்க்கப்போவது ஒரு தனி மனிதனையோ அல்லது சிறிய குழுக்களையோ அல்ல, தான் எதிர்க்கபோவது ஒரு நாட்டின் இராணுவத்தை என்று நன்றாகஉணர்ந்திருத்த அந்த இளைஞன் அதற்காக வைத்திருந்த ஒரே ஒரு ஆயுதம் ஒரு பழைய துருப்பிடித்த கைத்துப்பாக்கி மட்டுமே.

ஒரு பழைய துருப்பிடித்த கைத்துப்பாக்கியை மட்டுமே ஆரம்பத்தில் வைத்துக் கொண்டு, ஒரு நாட்டின் இராணுவத்தை எதிர்க்க துணியும் தைரியம் அந்த இளைஞனை தவிர வேறு யாருக்கும் வந்து இருக்காது.

அன்று அந்தப் பழைய துப்பாக்கியை மட்டுமே வைத்துக் கொண்டு, இரண்டு மூன்று நண்பர்களுடன் மட்டுமே தனது போராட்டத்தை ஆரம்பித்த அந்த இளைஞன், அன்றிலிருந்து சரியாக முப்பது வருடங்களின் பிறகு, தரைப்படை, கடற்படை, வான்படை என முப்படைகளையும் கொண்டு, முப்படைகளையும் கொண்ட ஒரு மரபு ரீதியான இராணுவமாக தனது படை பலத்தை யாருமே கற்பனை செய்து கூட பார்த்திராத அளவுக்கு மாற்றி காட்டினான்.

அன்று இலங்கை என்ற ஒன்றே ஒரு நாட்டிற்கு எதிராக போராட்டத்தை ஆரம்பித்த அந்த இளைஞன், அதன் பிறகு வந்த முப்பது வருடங்களில், நேரடியாக பதினாறுக்கும் மேலான நாடுகளையும், மறைமுகமாக முப்பதுக்கும் மேற்பட்ட நாடுகளையும் தனித்து எதிர்கொண்டு, யாருக்கும் தலைவணங்காது, யாருக்கும் அடிபணியாது வீரத்துடன் போராடி, வரலாற்றின் பக்கத்தில் தனது பெயரை ஆழமாக பதிவு செய்து கொண்டான்.

நாம் கதைகளில் மட்டுமே படித்த மாவீரர்களின் வீரத்தினை நமது கண்முன்னால், நிகழ்த்தி காட்டி இன்னும் ஆயிரம் வருடங்கள் கடந்தாலும் அழிக்க முடியாத வரலாறாக மாறி விட்ட அந்த வீரன் வேறு யாரும் இல்லை. தமிழர்களின் தலைவன். தமிழீழத்தின் புதல்வன், மேதகு வே. பிரபாகரன் அவர்கள்.



Wednesday, February 26, 2014

சென்னை விமானநிலைய கார்கோவில் - சில பிணம் திண்ணிப் புழுக்கள்...!

சென்னை விமானநிலைய கார்கோவில் - சில பிணம் திண்ணிப் புழுக்கள்...!

மனிதநேயம் உள்ளவர்கள் அனைவரும் கட்டாயம் பகிர வேண்டிய பதிவு....!

இது நம் நாட்டின் சாபக்கேடு, தயவு செய்து பிறர் அறிய பகிருங்கள் நண்பர்களே..

உள்நாட்டில் எல்லா வசதிகளும் வேலை வாய்ப்புகளிலும் புறக்கணிக்கப்பட்டு வேறு வழியில்லாமல் வெளிநாட்டில் தன் குடும்பத்தினைக் காப்பாற்றுவதற்காக கனவுகளைச் சுமந்துகொண்டு விமானமேறி வெளிநாடு செல்லும் இந்தியர்களில் தமிழக தென்மாவட்ட ஏழை விவசாயிகளே அதிகம். அவ்வாறு சென்றவர்களில் கடந்த இருபது ஆண்டுகளில் மட்டும் மலேசியா, சிங்கை, அரேபியா, துபாய் உள்ளிட்ட பல நாடுகளில் இதுவரை ஐம்பாதாயிரத்திற்கும் மேற்பட்டோர் இறந்திருக்கிறார்கள்.

அவ்வாறு இறந்தவர்களில் பலர் "சுமந்து சென்ற கனவுகளோடு அந்தந்த நாடுகளில் உள்ள சுடுகாட்டில்" அழுவதற்குக் கூட ஆளின்றி, முறைகள் செய்ய உறவின்றி புதைக்கப்படுகிறார்கள்.

பலர் "செல்லும்போது விமானச் சீட்டில் பயணம் செய்தவர்கள், திரும்பும்போது பெட்டிகள் அடுக்கும் பகுதிக்குள் மரப்பெட்டிக்குள் வைத்த பிணமாய்" கார்கோவிற்கு வந்து சேர்கிறார்கள்.

அவ்வாறு வந்து சேரும் கார்கோவிற்கு இங்குள்ள உறவுகள் சென்று உடலை எடுத்து வரவேண்டும். எந்த நாட்டில் இருந்து அந்த உடல் அனுப்பப்ப்டுகிறதோ அந்த நாட்டில் இருந்து அனுப்புவதற்கு முதல்நாள் அவர்களின் வீட்டிற்கு "உறுதிப்படுத்தும்" அலைபேசி சென்னை கார்கோவில் இருந்து வரும். கடந்த இரண்டு ஆண்டுகளாக அவ்வாறு கார்கோவில் இருந்து அழைப்பவர்கள் "வரும்பொழுது பத்தாயிரம் ரூபாய்"
செலவாகும் எடுத்துவாருங்கள் என்றும் சொல்கிறார்கள்.


எதற்காக இந்த பத்தாயிரம் ரூபாய் ? லஞ்சமாம்!

ஆம்... இதனை கொடுக்கவில்லையேல், பெரும்பாலும் இரவிலேயே விமானங்கள் வந்து சேர்வதால், உடலை எடுக்கச் செல்பவர்களுக்கு அங்கே அலைக்கழிப்புத்தான் மிஞ்சும். இரவில் எடுக்க முடியாது காலையில் வாருங்கள் என்றும், பல பரிசோதனைகள் செய்யவேண்டும் என்றும், காவல்துறையில் சென்று புகார் கொடுத்து அதன் நகலை எடுத்து வாருங்கள் என்றும் துக்கத்தோடு காத்திருக்கும் குடும்பத்தினரை மேலும் கொடுமைப்படுத்து கிறார்கள்.

அதேசமயம் அங்கே இருக்கும் சில ஏஜெண்டுகளின் எண்களையும் அவர்களே தந்து, அந்த ஏஜெண்டுகளிடம் பணத்தைக் கொடுத்ததும் அடுத்த ஒரு மணி நேரத்தில் "உடல் பெட்டி" வந்துவிடுகிறது.

அந்த கார்கொவில் பணிபுரியும் அதிகாரிகள்தான் இவ்வளவு சித்து வேலையும் செய்யும் நல்ல பிறப்புப் பிறக்காத நாய்கள். அட பிணம் திண்ணி கழுகுகளா எதுக்குடா இந்த பணம். உங்களுக்கும் குடும்பம் பிள்ளைகள் இருக்காங்கதானே.நீங்க நல்ல சாவு சாக மாட்டிங்கடா. என்கிறார்கள் பாதிக்கப்பட்ட உறவுகள்.

தன் மகன் வெளிநாட்டிற்கு போகிறான். தங்கச்சிய கரை சேத்துடலாம்... சின்னதாவாவது ஒரு வீடு கட்டிவிடலாம்.னு ஆசையோட காத்திருக்கும் குடும்பத்தினருக்கு "போன கடன் தீர்க்கும் முன்னே செத்துப்போன பிள்ளையின் உடலையாவது பார்ப்போமே" என்று கண்ணீரோடு காத்திருக்கும் அந்த குடும்பம் சென்னை விமான நிலையத்தில் இப்படிப் படும்பாடுகளை சொல்லி மாளாது வேதனைக்கு மேல் வேதனையை அனுபவிக்கிறார்கள்
இந்த செய்தி எல்லாருக்கும் சென்று சேர வேண்டும். எங்காவது ஒரு நல்ல அதிகாரிக்கு, ஒரு நல்ல மனசாட்சி உள்ள அமைச்சருக்கு, ஆளும் அரசுக்கு இந்த செய்தி சென்று சேரும். இனியும் இது தொடரக் கூடாது. பகிருங்கள் நண்பர்களே...! உங்களின் பங்களிப்பு இதில் அவசியம்..!



சமூகம் அரசியல் மீதான என் குரல் பதிவுகளின் வழியாக ஓங்கி ஒலித்து கொண்டே இருக்கும்

உங்களின் கருத்துகள் வரவேற்கப் படுகிறது

நன்றிகள்.

தமிழ்ச்சகோதரர்கள்

தமிழன் ஒரு ஏமாளி

நண்பர்களுக்கு வணக்கம்...

இந்த வாரம் தாரளமயமாக்கல் என்ற பெயரில் தமிழன் எப்படியெல்லாம் ஏமாற்றப்ப்ட்டு இருக்கிறான் என்பதை பார்ப்போம்
#தமிழனின் இளிச்சவாய்த்தனம்#

#உங்களுக்கெல்லாம் தெரியுமா நண்பர்களே நாம் பயன்படுத்தும் சிம் கார்டில் இருந்து, ரீசார்ச் கூப்பன் வரையில் 
தமிழ்நாட்டில் தான் அதிகவிலையில் விற்க்கிறார்கள். BSNL, AIRTEL, AIRCEL, VODOFONE, IDEA, DOCOMO இப்படி அனைத்து
#Reacharge coupens, Rate Cutter, Booster Pack என அனைத்துமே தமிழகத்தில் தான் அதிகவிலை.

எடுத்துகாட்டாக: கர்நாடகா & கேரளா போன்ற அண்டை மாநிலங்களில் 30-ரூபாயில் இருந்து Full Talk time.
ஒரு மாததிற்கு Rate Cutter 25-ரூபாயில் இருந்து ஆரம்பிகிறது தமிழ்நாட்டில் ரேட்கட்டர் ஒரு மாதத்திற்க்கு 60-ரூபாக்கு மேல் தான்.
இந்த மொள்ளாமாரி தனத்தை அனைத்து நட்வொர்க் கம்பெனிகளும் செய்கிறது.

#பாரத ஸ்டேட் பேங்க் SBI (State Bank Of India)
இதன் மாநிலம் சார்ந்த கிளைகள் அந்ததந்த மாநிலத்தின் பெயரிலேயே இருக்கிறது உதாரணம் இதோ.
#SBM (State Bank Of Mysore)
#SBH (State Bank Of Hydrabad)
#SBT (State Bank Of Tiravangore)
#SBP (State Bank Of Punjab)
ஏன் State Bank Of Tamilnadu இல்லை. 

இதில் மிகவும் கொடுமை என்னவென்றால்.
மேலே கூறிய அனைத்து மாநிலப் பெயர் கொண்ட வங்கிகளுக்கும் தமிழகத்தில் கிளைகள் இருக்கிறது.

#கெயில் நிறுவனம் ஆந்திராவில் இருந்து கர்நாடகவிற்கு கேஸ் (Gas) எடுத்துச் செல்ல தமிழக விவசாய நிலங்களின் வழியாக எடுத்து செல்கிறது.
இதனால் 100 ஏக்கருக்கு மேல் விவசாயிகளின் விளைச்சல் நிலம் வீணடிக்கப்பட்டுள்ளது.

#விவசாயிகள் நீதிமன்றத்தில் முறையிட்டதற்கு???

#கேஸ் குழாய் பதிப்பதில் தவறு ஒன்றும் இல்லை என்று தீர்ப்பு வழங்கி பணமுதலாளிகளை காப்பாற்றி இருக்கிறது.

#இதே கெயில் நிறுவனம் கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களில் விவசாயிகளின் மிரட்டலுக்கு பணிந்து “தேசியநெடுஞ்சாலைகளின் ஓரமாக குழாய்களை பதித்து செல்கிறது.

#சென்னை மாநகரின் காவல் ஆணையர் (City Commisioner) கேரளத்தை சேர்ந்த ஜார்ஜ் அவர்கள்.

#கேரளாவில் இப்படி ஒரு தமிழனை உயர்பதவிகளில் வைப்பார்களா????

இந்த கட்டூரையின் மூலம் நான் தெளிவு படுத்த விரும்புவது.
தமிழர்கள் மற்ற மாநில மக்களுக்கு எதிரிகள் அல்ல ஆனால் மற்ற மாநிலங்கள் எங்களை சமமாக மதிப்பது இல்லை என்பதே உண்மை.
மற்ற மொழிபேசும் மாநில நண்பர்களை நாங்கள் கேட்டுகொளவது ஒன்றுதான். தமிழன் என்பதை மறந்து மேலே கூறியதை மனசாட்சியுடன் கொஞ்சம் படித்து உணர்ந்து பாருங்கள்.

எங்களின் வலி உங்களுக்கும் புரியும்...
மற்ற மாநிலத்தவருக்கு இது சாதாரணம்..
ஆனால் தமிழனுக்கோ சதா...ரணம்

சமூகம் அரசியல் மீதான என் குரல் பதிவுகளின் வழியாக ஓங்கி ஒலித்து கொண்டே இருக்கும்

உங்களின் கருத்துகள் வரவேற்கப் படுகிறது

நன்றிகள்.
தமிழ்ச்சகோதரர்கள்


Tuesday, February 25, 2014

இந்தியாவின் டீசல் தன்மை - கொடூரம்

நண்பர்களுக்கு வணக்கம் ..

இந்த வாரம் ஒரு மற்றும் ஒரு புதிய அதிர்ச்சி தகவலுடன் வந்து இருக்கிறேன்.

#இந்தியாவில் பயன்படுத்தப்படும் டீசல் அதிக தீப்பற்றும் தன்மையுடன் இருக்கிறது. என்ன தீப்பற்றும் தன்மை????

மற்ற நாடுகளை விட இந்தியாவில் பயன்படுத்தும் டீசல் தான் மிக விரைவில் தீப்பற்றும் தன்மையும் அதிக புகையும் கொண்டது என ஆய்வில் தெரியவந்துள்ளது.
மற்ற நாடுகளில் “Flame Flash Point level 5 to 8" வரை இருக்கிறது. இந்தியாவிலோ Flame Flash Point level 1 to 4 -க்குள் இருக்கிறது

இதற்க்குக் காரணம் “நாப்தல்” என்ற இனைபொருள் டீசல் தயாரிப்பில் அதிக அளவில் சேர்க்கப் படுவதே.
தனியார் இந்திய எண்ணை தயாரிப்பு நிறுவனங்கள் அவர்களின் சுய லாபத்திற்க்காக இப்படி செய்கிறது.

இதனால் மனிதருக்கும் வாகனங்களுக்கும் ஏற்ப்படும் விளைவுகள்????
#வாகனங்களில் இது போல அதிக கரித்தன்மை கொண்ட எரிபொருள் பயன்படுத்துவதால் சீக்கிரமே உங்கள் வாகனத்தின் எஞ்சின் பாழாகும்.
#குறிப்பாக ஒரு வாகனம் 5 வருடங்கள் எந்த பிரச்சனையும் இல்லாமல் இருக்கும் என்றால்..?
இந்த டீசல் போடுவதால் அதிகபட்சம் 2 வருடங்களுக்குள் எஞ்சின் பாழாகி உங்களுக்கு செலவுவைக்கும்.
#இந்த எரிபொருள் தான் இந்தியா முழுமைக்கும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் தான் பெரும்பாலான பேருந்துகள் விபத்து ஏற்ப்பட்ட உடன் எளிதில் தீப்பிடித்து அதிக உயிர்கள் பலியாகின்றது.
சமீபத்தில் ஆந்திராவில் சொகுசுபேருந்து தீப்பிடித்து 100-க்கும் மேற்பட்டோர் பலியானது செய்திகளில் பார்த்தோம்..
இதில் வெட்கப்பட வேண்டிய செய்தி என்னவென்றால் இந்த டீசல் விவகாரம் மத்திய அரசுக்கு தெரியும்.
எண்ணெய் நிறுவனங்கள் தங்களின் சுய லாபத்திற்காக மனித உயிகளோடு விளையாடி வருகிறது.

எங்கும் ஊழல் எதிலும் ஊழல். 
பொங்கும் ஊழல் புதுமை ஊழல் என
தினம் தினம் புது புது ஊழல்கள்.
யப்பா முடியல சாமீ என்று மக்களே வெறுக்கும் அளவுக்கு செய்துவிட்டது இந்த பாழாய்போன மத்திய அரசு.

சமூகம் அரசியல் மீதான என் குரல் பதிவுகளின் வழியாக ஓங்கி ஒலித்து கொண்டே இருக்கும்
உங்களின் கருத்துகள் வரவேற்கப் படுகிறது

-நன்றிகளுடன்
தமிழ்ச்சகோதரர்கள் 

அரசியல் மற்றும் சமூகம் மீதான என் பார்வை - பகுதி-2

அரசியல் & சமூகம் மீதான எண் பார்வை

*2014-ல் பொதுத்துறை வங்கிகள் தனியார்மைய மாக்கப்படும்*
*அனைத்து விமானநிலையங்களும் தனியார் வசம் கொடுக்கப்படும்*

இதற்கான ஏற்பாடுகள் & வரைமுறைகள் முழுமையாக முடிந்து விட்டது 2014-ல் இது முழுமையாக நடைமுறை படுத்தப்படும்.

முதலில் தனியார் மயமாக்கல் என்பது என்ன..???

அரசு இயந்திரம் தன்னால் நிர்வகிக்க முடியாத ஒரு நிறுவனத்தை தனியார் வசம் குறிப்பிட்ட சதவிகிதம் மட்டும் கொடுத்து லாபம் ஈட்ட எடுக்கும் ஒரு சட்ட நடவடிக்கை.
ஆனால் அரசு இன்று எதை எல்லாம் தனியாரின் கைகளில் கொடுத்து இருக்கிறது???
#கல்வி#
#மருத்துவம்#
#பெட்ரோலியத்துறை#
#நெடுஞ்சாலைத்துறை#
#ஆயுள்காப்பீடு (இன்சுரன்ஸ்)#
#வங்கிகள்#
இன்னும் இந்தப் பட்டியல் இருக்கிறது இப்படி நாட்டின் வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றும் அனைத்து துறைகளையும் தனியார்வசம் கொடுத்து விட்டால் நாட்டின் பணவீக்கம் 80 என்ன 200 ரூபாய் கூட ஆகலாம்.

*ஒரு சில துறைகளை தனியாரிடம் கொடுத்து விட்டு. மக்கள் பயன்பெறும் பொதுத்துறை நிறுவனங்களான கல்வி, மருத்துவம், பெட்ரோலியம், ஆயுள் காப்பீடு போன்றவைகளை அரசு நடத்தி இருக்கலாம்.

*வளர்ந்த நாடுகளில் எல்லாம் மேலே கூறிய அனைத்து துறைகளும் அரசின் கட்டுப்பாட்டிலே இயங்கி வருகிறது. அப்படி இயங்கியதால் மட்டுமே அடித்தட்டு மக்களின் வாழ்க்கை அந்நாட்டுகளில் வளர்ந்து இருக்கிறது.
#நம்முடைய இப்போதைய இந்த அரசியல், பொருளாதரம் மற்றும் சமூக அமைப்பு #

*லட்சாதிபதியை கோடிஸ்வரனாக மாற்றுகிறது,

*நடுத்தர மக்களை ஏழைகளாக மாற்றுகிறது,

*ஏழைகளை ஒருவேளை சோற்றுக்கு போராட வைக்கிறது.

*இதற்கு கீழ் நிலையில் இருப்பவர்களை பற்றி சொல்லவே வேண்டாம் ஏன் என்றால் ஒவ்வொரு பேருந்து நிலையத்திலும் மாநகர டிராபிக் சிக்னலிலும் தினமும் இவர்களை கடந்தே நாம்போக வேண்டும்.

*சுதந்திரம் பெற்று இந்த 67-ஆண்டுகளில் நம்நாடு முன்னேறவில்லை என்பதற்கு இவர்களே உயிருள்ள சாட்சிகள்.

*உங்களில் எத்தனை பேருக்கு தெரியும் உலகின் தலைசிறந்த 200 பல்கலைழகங்களில் ஒன்று கூட இந்தியாவில் இருந்து தேர்வாகவில்லை.

*ஊழல் மிகுந்த நாடுகளில் இந்தியா முதல் 5 இடத்திற்குள் வருகிறது

*எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகம் உள்ள நாடுகளின் பட்டியலில் முதல் 10 இடத்திற்குள் வருகிறது.

*சுகாதரமான நாடுகளின் பட்டியலில் 157-வது இடத்தில் இருக்கிறது

இதெல்லாம் நமக்கு சிறப்பா?? ஒரு கனம் சிந்தியுங்கள் நம்நாடு எதை நோக்கி பயனிக்கிறது நம் சமூகம் என்ன நிலைக்கு இதனால் தள்ளப்படும் தெரியுமா???
தனி ஒருவனுக்கு உணவில்லை எனில் ஜகத்தினை அழித்து விடுவேன் என்ற பாரதியின் வாக்கு பொய்யாகி. தனி ஒரு மனிதனுக்கு உணவில்லை எனில் அவனை கொன்றுவிடுங்கள் என்ற நிலை மிக விரைவிலேயே வரும். மனிதம் மறந்தால் நாம் மனிதர்களாய் வாழ தகுதியற்றவர்கள்.

பணம் நம் வாழ்க்கைக்கு மிக முக்கியம் ஆனால் நம் சமூகம் என்பது வெறும் பணத்தால் மட்டும் கட்டமைக்கப்பட்டது அல்ல உறவுகள், சாதி, பாரம்பரியம், பண்பாடு இவை அனைத்தையும் சேர்த்து பின்னப்பட்டது
இன்று நாம் பணத்தேடலில் அனைத்தையும் இழக்கிறோம். நமக்கென்று  தனி வரலாறு இருக்கிறது. நமக்கென்று உலக வரலாற்றில் தனி அடையாளம் இருக்கிறது. அடையாளத்தை இழந்து ஆடம்பரத்தை எதிர்பார்ப்பது அவமானம்.

மாளிகை வீடு, கோடிகோடியாய் பணம், தங்கத் தட்டில் சோறு, இவையெல்லாம் கொடுத்து தனியாய் யாரும் இல்லாத காட்டில் வாழவேண்டும் என்றால்  நம்மால் முடியுமா???
கண்டிப்பாக முடியாது. வெற்றியை கொண்டாட நமக்கு உறவுகள் & நட்புகள் வேண்டும், அப்படி யாரும் இல்லாத வெற்றி தோல்வியை விட கேவலமானது. நான் ஜெயித்தேன் என்பதை விட யாரும் தோற்கவில்லை என்பதே சாலச்சிறந்தது.
அதற்க்காக உங்களை எல்லாம் புத்தனாகவோ, காந்தியாகவோ மாறச் சொல்லவில்லை நம் சமூகம் எதை நோக்கி பயனிக்கிறது என்பதை உங்கள் கண்முன் நிறுத்தும் ஒரு சிறு முயற்ச்சியே இந்தப் பதிவு.
இறக்கத்தான் பிறந்ததோம் அதுவரை இரக்கத்தோடு இருப்போம் என்ற அன்னை தெரசாவின் வரிகளை பின்பற்றினேலே போதும்.

சமூகம் அரசியல் மீதான என் குரல் பதிவுகளின் வழியாக ஓங்கி ஒலித்து கொண்டே இருக்கும்

உங்களின் கருத்துகள் வரவேற்கப் படுகிறது

-நன்றிகளுடன்
தமிழ்ச்சகோதரர்கள் 

அரசியல் மற்றும் சமூகம் மீதான என் பார்வை

நண்பர்களுக்கு வணக்கம்...

அரசியல் மற்றும்  சமூகம் மீதான என் பார்வை 

சமீபத்திய செய்திகளில் இருந்தே ஆரம்பிப்போம்

#ரயில் பரமரிப்பு & பயணக் கட்டணம் ஊழல் ரூபாய்:500,000,000,000 (ஐம்பதாயிரம் கோடி)#

புதுசு கண்ணா புதுசு காங்கிரஸின் அடுத்த கட்ட ஊழல் சாதனை ஆரம்பம். எதிர்கட்சிகள் பாராளுமன்றத்தில் அமளி செய்யவும், வெளிநடப்பு செய்து பாராளுமன்றம் நடக்கவிடாமல் செய்யவும் காரணம் கிடைத்து விட்டது இங்கு வீணடிக்கப் பட்டுள்ளது அனைத்தும் மக்களின் வரிப் பணமே என்பதை மறக்க வேண்டாம்

#பிரதமர் மன்மோகன்சிங் வெளிநாட்டு பயணச்செலவு கடந்த 5 ஆண்டுகள் ரூபாய்:6420,000,000 (642 கோடிகள்)#

வெளிநாட்டுக்கு போய் அப்படி என்ன நாடு முன்னேற திட்டம் கொண்டுவந்தார்??
*எளிமையை அடையாளமாக காட்டிய காந்தி அவர்களின் கட்சியான காங்கிரசாரின் செயல்பாடுகளை பாருங்கள்.

#அமெரிக்கா வெளியிட்டுள்ள ஓன்றுக்கும் உதவாத & செயல்படாத பிரதமர்கள் பட்டியல்#*#இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் முதலிடம்#

#உங்களின் தொழில்துறைகளை இந்தியாவில் முதலீடு செய்யதீர்கள் உங்களின் பணம் வீணாய்ப்போகும். பன்னாட்டு நிறுவனங்களிடம் அமெரிக்கா வேண்டுகோள்#

#தாய்மொழியை பயன்படுத்தாதோர் அதை மதிக்காதோர் மாநகரம் பட்டியல்# #சென்னை-க்கு முதலிடம் BBC வெளியீடு#

#பெரியோகளுக்கு மரியாதை கொடுக்காதவர்கள் நிறைந்துள்ள மாநிலம் முதல் இடம் தமிழகம்#

இது பெருமைப்பட வேண்டிய செய்தி அல்ல.

நண்பர்களே ஒரு கனம் சிந்தியுங்கள் நம் பெற்றோர்கள் 1960-களின் இறுதியில் பிறந்தவர்கள் ஆனால் நாம் 1985-களின் இறுதியில் பிறந்தவர்கள் நமக்கும் நம் பெற்றோர்களுக்கும் கிட்டத்தட்ட 20-30 ஆண்டுகள் இடைவெளி இருக்கிறது ஆகவே நம் வேகத்திற்க்கும், விருப்பத்திற்க்கும் ஏற்றவாறு மாறி வர சற்று நேரம் ஆகலாம், மாறாமலும் கூட போகலாம் அது தவறு இல்லை.

*உங்களுக்கு அறிவுரை சொல்ல எனக்கு விருப்பம் இல்லை அதற்க்கான தகுதியும் எனக்கில்லை.

*சிறு தகவலை மட்டும் நினைவூட்ட விரும்புகிறேன்.

*உங்களின் குழந்தை பருவத்தில் நீங்கள் என்னவெல்லாம் மழலைத்தனமாக உளறினீர்களே அத்தனையும் அர்த்தம் புரியவில்லை என்றாலும் அதை ரசித்து கேட்ட முதல் ரசிகர்கள் நம் பெற்றோர்களே. இன்று அம்மா நம் பேரை அழைத்தாலே “என்னம்மா” என்று சலித்துக் கொண்டே கேட்கிறோம் (நான் உட்பட)...

#இங்குள்ள நண்பர்கள் அனைவரிடமும் சில கேள்விகள்# *இதை உங்கள் மனசாட்சி இடம் நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள்*

உங்களுக்கு#ரஜினி, கமல், அஜித், விஜய், சிம்பு, தனுஷ்# போன்ற நடிகளின் பிறந்த நாள் தெரியும்.

*நம்மில் எத்தனை பேருக்கு தங்கள் அப்பா, அம்மாவின் பிறந்த தினம் நினைவிருக்கிறது???

*உங்களின் பணத்தில் ஒருமுறையாவது பெற்றோருக்காக பிறந்த தினம் கொண்டாடி இருக்கிறீகளா???

*எப்போதாவது அவர்களின் பிறந்த நாளுக்காக புதுத்துணி Surprise'ஆக வாங்கி கொடுத்து இருக்கிறீர்களா???

*எப்போதாவது பிறந்தநாள் வாழ்த்துக்கள் அப்பா என்று சொல்லி இருக்கிறீகளா???

*ஆனால் காதலர் தினத்தை வெகு சிறப்பாக கொண்டாடி வருகிறோம் சாக்லேட் கொடுப்பது பேஸ்புக்கில் வாழ்த்து பரிமாறுவது பற்றி சொல்லவே வேண்டாம்..

*ஒரே ஒரு முறை பெற்றோரின் பிறந்தநாளை கொண்டாடித்தான் பாருங்கள் அவர்கள் வேண்டாம் என்று தான் சொல்லுவர்கள் ஆனால் நீங்கள் ஒருமுறை ஆடை வாங்கி கொடுத்தால் பல வருடம் கழிந்த பிறகும் அதை சொல்லி பெருமைப் படுவார்கள். நாம் அந்த வார்த்தைகளில் சொர்கத்தையே காணலாம்.

**பெற்றோர்களையும் பெரியோர்களையும் மதிக்காத குடும்பம் உறுப்படாது** -பழமொழி (நல்ல குடும்பமே ஆரோக்கியமான குடும்பத்தின் அங்கம்)

சமூகம் அரசியல் மீதான களை எடுக்கும் என் பணி தொடரும்

உங்களின் கருத்துகள் வரவேற்கப் படுகிறது.

-நன்றிகளுடன்
தமிழ்ச்சகோதரர்கள் 

இந்த 10 ஆண்டுகால ஆட்சியைப் பற்றி

நண்பர்களுக்கு வணக்கம்...

இந்த 10 ஆண்டுகால ஆட்சியைப் பற்றி...

தமிழகத்தில ஏதோ ஒரு மாவட்டத்தின் கிராமத்தில் வாழும் பாமரனான நான் என் கருத்துக்களை இங்கே பதிவிட விரும்புகிறேன்...
சமீபத்திய செய்திகளை பார்த்துக் கொண்டு வருகிறோம்
#அமரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபயின் மதிப்பு#
சுதந்திரத்திற்க்கு முன்பே இந்திய ரூபாயின் மதிப்பு டாலருக்கு நிகராக இருந்தது...
சுதந்திரம் பெற்று 67 ஆண்டுகளாக எத்தனை திட்டம்??
எத்தனை வளர்ச்சிப் பணிகள்??
இத்தனையும் போட்டு என்ன பயன்??
இதற்க்கு நாம் ஆங்கிலேயனுக்கு அடிமையாகவே இருந்திருக்கலாம்...
கடனாவது இல்லாமல் இருந்திருக்கும்.
#விவசாயம்#
#கல்வி#
#மின்சாரம்#
#குடிநீர்#
#எல்லை பாதுகாப்பு#
#உள் கட்டமைப்பு#
#மருத்துவம்#
#விளையாட்டு#
#தொழில் நுட்பம்#
இப்படி அனைத்து துறைகளிலும் நாம் பின் தங்கிய நிலைகளில் தான் இருக்கிறோம்.
**மருத்துவ சிகிச்சைக்காக சோனியா அமரிக்கா செல்கிறார்**
அப்போ இத்தனை மருத்துவமனைகள், டாக்டரேட் பட்டம் வாங்கிய பெரிய மருத்துவர்கள் இவர்கள் எல்லாம் சும்மாதான் இருக்கிறார்களா???
அப்படியென்றால் உங்களுக்கே இந்திய மருத்துவர்கள், மருத்துவமனைகள் மீது நம்பிக்கை இல்லை என்றால் எப்படி??
சரி உங்களிடம் பணம் இருக்கிறது நீங்கள் வெளிநாடு செல்வீர்கள் பாமர ஏழை என்ன செய்வான்??
அவனெல்லாம் வாழ தகுதியற்றவனா?? ஆம் என்றால் வாழ தகுதியற்றவனுக்கு எதற்க்கு ஓட்டுரிமை???

உங்களில் எத்தனை பேருக்கு தெரியும் இன்னமும் கூட மின்சாரம், பள்ளிக்கூடம், தார்சாலை, கூட்டுறவு கடை, குடிநீர்வசதி, இன்றி எத்தனையோ கிராமங்கள் இருக்கின்றன.
பவர்கட் என்ற ஒன்று அனைவருக்கும் தெரியும் அதில் அதிகபட்சம் பாதிக்கப் படுவது கிராமங்கள்தான் கிட்டத்தட்ட 20 மணி நேரம் கூட என் கிராமத்தில் பவர்கட் செய்து இருக்கிறார்கள்.

இப்பொது சற்று குறைந்து இருக்கிறது. ஆனால் SkyWalk, (ஸ்கைவால்க்), Express venue (எக்ஸ்பிரஸ் அவென்யு), சரவணா ஸ்டோர், போத்தீஸ், சென்னை சில்க்ஸ் இன்னும் இதுபோன்ற வியபார நிறுவனங்கள் இரவில் அதிகமான அலங்கார விளக்குகளை தங்களின் கடைகளை ஜொலிப்பாக காட்ட அதிகப்படியான மின்சரத்தினை பயன்படுத்துகிறது
இப்படி அதிகப்படியான மின்சாரத்தினை ஒரு நாள் மிச்சப் படுத்தினால் அனைத்து கிராமங்களுக்கும் தங்கு தடையின்றி ஒரு வாரம் முழுவதும் மின்சாரம் வழங்க முடியும் தெரியுமா??

இப்படி மின்சாரத்தினை தேவையில்லமல் வீணடிப்பதாலேயேயும் சரியான முறையில் சேமிப்பு & உற்பத்தியை கையாளாமலும் 1990-களில் லாபத்தில் இயங்கி வந்த தமிழ்நாடு மின்சார வாரியம் தற்போது 50,000 கோடி கடனில் இருக்கிறது.
#இந்தியாவின் முதுகெலும்பு கிராமங்கள் என்றார் காந்தி#
அப்படி முதுகெலும்பை முறித்துவிட்டு எதை நிமிர்த்த பார்க்கிறது இப்பொதுள்ள அரசு???
நைஜிரீயா, மாம்போ, காங்கோ போன்ற பின்தங்கிய நாடுகளில் கூட புற்றுநோய்க்கான மாத்திரைகள் ரூபாய் 25-ல் இருந்து 200-க்குள் கிடைக்கிறது.
இந்தியாவிலோ குறந்தபட்சம் ரூபாய் 2000-ல் இருந்து 50,000-வரை விலை உயர்ந்து நிற்க்க காரணம் என்ன?? இதை யார் சரி செய்ய முடியும்???

67 ஆண்டுகளாக எந்த துறையிலும் முன்னேற முடியாமல் இருப்பதற்க்கு பெயர்தான் ஜனநாயக மக்களாட்சியா???
இதனாலேயே அரசியலில் யாரை நம்புவது என்பது மக்களுக்கு இன்னமும் புரியவில்லை...
அரசியல் வியாதி நாய்களே ஒன்றை தெளிவாக புரிந்துகொள்ளுங்கள் மக்கள் உங்கள் மீதுள்ள நம்பிக்கையால் ஓட்டு போடவில்லை இவனாவது நல்லது செய்ய மாட்டானா என்ற ஏக்கத்தில் போடுகிறார்கள்....
மறவாதீர்.. ஏக்கங்கள் ஒருநாள் கோபமாய் மாரும் அன்று நீங்கள் எங்களின் காலடியில் பிணமாகவும் ரத்த வெள்ளத்திலும் உயிருக்காக எங்களிடம் கெஞ்சி கொண்டு இருப்பீர்கள்...
நாங்கள் காந்தியை கற்றதை விட நேதஜியை நெஞ்சில் வைத்து நேசித்ததே அதிகம்...

சமூகம் அரசியல் மீதான என் சாட்டை மீண்டும் தொடரும்...
உங்களின் கருத்துகள் வரவேற்கப் படுகிறது

-நன்றிகளுடன்
தமிழ்ச்சகோதரர்கள்